குராம் ஷெய்க் கொலை மற்றும் அவரது காதலியைத் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச் சாட்டில் கொழும்பு சிறையில் வைக்கப்பட்டுள்ள தங்கல்ல பிரதேச சபைத் தலைவர் சந்ரபுஷ்ப விதான பதிரன நட்சத்திர ஓட்டலில் இருப்பது போலும் இருப்பதாகத் தெரியவருகின்றது.
சாதாரணமாக சிறையிலுள்ள சந்தேக நபர் ஒருவரை பார்ப்பதற்கு ஒருநாளை மூன்று பேருக்கு ஒவ்வொரு முறை மாத்திரமே அனுமதியுண்டு. என்றாலும், உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கும் அவர்களுடைய ஆதாரவாளர்களுக்கும் இந்நிலைமையில் மாற்றம் உண்டு. அவர்களை எவரும் எந்நேரமும் போய்ப் பார்க்கலாம். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் எதுவாயினும் அதனைப் பெற்றுக் கொடுப்பற்கு சிறைச்சாலை உயரதிகாரிகளிடமிருந்து விருப்புக் கிடைக்கின்றது எனவும் கூறப்படுகின்றது.
அதேபோல, குறித்த நபரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போதும், அழைத்துவரும்போதும் ஏனைய சிறைக்கைதிகளுக்கு இல்லாத சலகை வழங்கப்படுகின்றது. மேலும் எந்தவொரு ஊடகவியலாளரும் அவரைப் படம் பிடிக்காதவண்ணம் அவரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.
(கேஎப்)