ஆயுதம் ஏந்திய குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்பைடயில் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஜெயகுமாரி சட்டத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயகுமாரியின் வீட்டில், முன்னாள் புலி உறுப்பினரான கோபி என்பவர் தங்கியிருந்தது தொடர்பாகவும் அண்மையில் வடக்கின் பல பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான துண்டுப் பிரசூரங்கள் தொடர்பில் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஜெயகுமாரியின் புதல்வியை எவரும் பராமரிக்க முன்வராத காரணத்தினால் அவரையும் சிறுவர் காப்பகம் ஒன்றில் ஒப்படைக்க நேரிட்தாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியல்வாதிகள் சிலர் தெரிவிப்பதனை போன்று வேறும் காரணிகளுக்காக சட்டவிரோதமான முறையில் ஜெயகுமாரியை கைது செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளதடன் சகல விடயங்களும் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும் சில அரசியல்வாதிகள் செய்து வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.