2017 வரை உலக வங்கி தடைவிதித்துள்ள சீனக் கம்பனியொன்றுக்கு, கடலைத் தரையாக்கி கொழும்புத் துறைமுக புதிய நகரத்தை உருவாக்கும் ஒப்பந்தம் டெண்டரின்றி வழங்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.
புறக்கோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும் குறிப்பிட்டதாவது -
“கடலைத் தரையாக்கி கொழும்புத் துறைமுக புதிய நகரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தம் எந்தவொரு டெண்டரும் அழைக்கப்படாமல் வழங்கப்பட்டுள்ள சீனக் கம்பனிக்கு 2017 ஆம் ஆண்டு வரை எந்தவொரு டெண்டரும் வழங்கக்கூடாது என உலக வங்கி தடை விதித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகரம் முழுமையாக நிறைவேறியதன் பின்னர், இந்நாட்டு தம்பி தங்கைகளுக்கு கல்கிஸ்ஸ கடற்கரை இல்லாமலாகி விடும்.
ராஜபக்ஷவின் ஆட்சியின் செயற்பாடுகள் காரணமாக பல பிரச்சினைகள் மேலெழுந்துள்ளன. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமானால் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்து, மக்கள் பலத்தை அதிகரித்து, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சக்தியை வழங்கும் வண்ணம் இம்முறை தேர்தலில் வாக்களியுங்கள்”
(கேஎப்)