இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கைக் கிரிக்கட் அணியினருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெருவரவேற்பளித்தார்.
இலங்கைக் கிரிக்கட் அணியின் வீரர்களை இன்று (08) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சந்தித்தார். இங்கு ஜனாதிபதி வெற்றியீட்டிய அணியினரைப் ஆரத்தழுவி பாராட்டியதுடன் அவர்களுக்கு விசேட கௌரவமும் வழங்கினார்.
இதன்போது, வெற்றியீட்டிய இருபதுக்கு 20 கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் லசித் மாலிங்க.
விளையாட்டமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை கிரிக்கட் தெளிவாளர் குழுவின் தலைவருமான சனத் ஜயசூரிய, மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(படங்கள் - சுதத் சில்வா)