தான் இதற்குப் பிறகு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன் குறிப்பிடுகிறார்.
தமிழ் மக்கள் இன்னல்களை அனுபவிக்கின்றமையால் தங்களால் இயலுமான உதவிகளைச் செய்யுங்கள் என தமிழ் மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே தான் வட மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கியதாக குறிப்பிடும் முதலமைச்சர், மாகாண சபையினால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது என்பது தனக்கு தற்போது நன்கு தெளிவாகி உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தாங்கள் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றதே.. அதுபற்றிச் சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு, இனி ஒருபோதும் அரசியலில் இறங்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டார்.
வட மாகாண முதலமைச்சர் கடந்த சில வருடங்களாக மாரடப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)