புத்த பெருமானுக்கும் பௌத்த சமயத்திற்கும் இழிவு உண்டாக்கும் காணொளி ஒன்றை இஸ்லாமிய அமைப்பொன்றினால் இணையத்தில் “யூரியுப்பில்“ வெளியிடப்பட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.
“ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்” எனும் இஸ்லாமிய அமைப்பினால் 2013 ஆம் ஆண்டு இணையத்தில் ஒன்றுசேர்த்திருந்த காணொளியே தற்போதைய பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
முஸ்லிம் அமைப்பாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட முஸ்லிம்களாயினும் சரி புத்த பெருமானுக்கோ பௌத்த மதத்திற்கோ இழிவு உண்டாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்கவியலாது என அக்கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் பீ.பீ.ஸி செய்திச் சேவையிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது -
இஸ்லாமிய சமயம் எந்தவொரு மதத்தையும் நிந்திப்பதில்லை. இலங்கை வாழ் முஸ்லிம்களில் 99% இற்கு மேற்பட்டோர் இந்தக் காணொளிக்கு எதிர்ப்புத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.
சிவில் அமைப்பின் ஒன்றுகூடலாக உள்ள முஸ்லிம் கவுன்ஸிலின் நோக்கம் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் எனும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதே எனக் குறிப்பிட்டுள்ள என்.எம். அமீன், எந்தவொரு மதமும் இன்னொரு மதத்தை இழிந்துரைப்பதை தங்களது அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சகல இனங்களும் தற்போது ஒருமைப்பாட்டுடனும், சமாதானமாகவும் வாழ்கின்றது என்பதற்கு இம்முறை நடந்தேறிய வெசாக் பௌர்மணி நிகழ்ச்சி எடுத்துக்காட்டாகும். இந்நிகழ்ச்சியில் மக்கள் மத வேறுபாடு களைந்து தங்களது ஒத்துழைப்பை நல்கியிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)