![](http://4.bp.blogspot.com/-Kl4RNc-polE/U6B4VznFAAI/AAAAAAAAJhQ/YP0xvhPCky4/s200/AGAINST.jpg)
வெலிகமவிலுள்ள அனைத்து உலமாக்களுக்கும் வெலிகம பாரி அறபுக் கல்லூரியில் இன்று மாலை 4 மணிக்கு ஒன்றுகூடுமாறு ஏலவே அறிவித்திருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சரியாக 4 மணிக்கு பாரி அறபுக் கல்லூரிக்கு வருகை தந்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஏனைய இடங்களைப் போன்று வெலிகமவில் எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படுவதற்க நாங்கள் இடமளிக்க மாட்டோம் என உத்தரவாதமளிக்கின்றோம். யாரேனும் ஒருவரோ, ஒரு குழுவினரோ இனவாதத்தைக் கக்கும் பேச்சுக்களைப் பேசினால் அல்லது அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுடன் விதண்டாவாதம் புரிவதற்கும், தாக்குதலுக்கும் செல்லாமல் உடனடியாக வெலிகம பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டார்.
தற்போது வெலிகம பொலிஸார் உசார் நிலையில் இருப்பதாகவும், எதற்கும் அச்சப்படத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
எதுஎவ்வாறாயினும், இன்றும் (17) மாலை தர்காநகரிலும், ஹம்பந்தோட்டை போலானவிலும் சின்னஞ்சிறு அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தககது.
(கேஎப்)