
திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்கு வெளியே வந்த அவரை பலர் கண்டுகொள்ளவில்லை. அவராகவே ஆசிர்வாதம் செய்தபடி கையை காட்டிக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அவருக்கு பின்னால் நடிகை ரஞ்சிதா காவி உடையில் இருந்தார். நித்யானந்தா கழுத்தில் மிகப்பெரிய தங்க நகை ஒன்றை அணிந்திருந்தார்.
வெங்கடாஜலபதியை தரிசித்த பின்னர் நித்யானந்தா தனது சீடர்களுடன் கோவிலை சுற்றி வந்தார். அப்போது கோவிலின் திருக்குளத்தின் அருகே வந்து சில நிமிடங்கள் நின்று கோவில் கோபுரத்தை தரிசித்தார். நித்யானந்தாவை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் ரஞ்சிதாவை போட்டோ எடுக்கவும், வீடியோ எடுக்கவும் பக்தர்கள் பெரும் ஆர்வம் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதியில் உள்ள பக்தர்கள் தன்னை கண்டுகொள்ளாமல் இருந்ததால் நித்தியானந்தா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக அவருடைய சீடர்கள் தெரிவி த்தனர்.