வடக்கு கிழக்கு மாகணங்களில் வசிக்காத யுத்தத்தின் உண்மை நிலையை கண்டிராத வடமுதலமைச்சர் விக்கி சாட்சியமளிப்பதன் வேடிக்கை என்ன????
யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராத வட மாகாண முதலமைச்சர், இலங்கைக்கு எதிராக யுத்த குற்றச்செயல்கள் குறித்து, ஜெனீவா ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க திட்டமிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்செயல்களை சுமத்தி, விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு தூபமிடும்நவநீதம் பிள்ளையின் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சொந்தமான வடக்கில் வெளி யாகும் உதயன் பத்திரிகையிலேயே அவருடைய கூற்று வெளியிடப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற சம்பவங்கள் எதனையும் தான் காணாத போதிலும், ஆணைக்குழு முன்னிலையில் தான் சாட்சியமளிக் கப்போவதாக, அவர் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக உண்மையான சுயாதீன மத்தியஸ்த விசாரணையொன்றை நடாத்துவதாக இருந்தால், அங்கு தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டிய உண்மையான இடம், மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்ந்த அங்குள்ள நிலைமைகளை அனுபவித்தவர்களிடம் கேட்டறிய வேண்டும்.
எனினும் இவ்வாறு வடக்கின் உண்மை நிலையை கண்டிராத, பயங்கரவாதத்திற்கு தூபமிட்டு, சர்வதேசத்திற்கு மத்தியில், மறைந்திருப்பவர்களிடம் பெற்றுக்கொள் ளும் சாட்சியங்களின் பயன் என்னவென, சர்வதேச ஆய்வாளர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் பிள்ளையின் குழுவிற்கு விசாரணைகளை மேற்கொள்ள செல்ல, தெற்காசியாவின் எந்ஜதவொரு நாடும் வீசா வழங்காத நிலையில், தெற்காசிய பிராந்தியம் தவிர்ந்த வேறொரு இடத்திலிருந்து அக்குழுவிற்கு விசாரணைகளை நடாத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலேனும் யுத்தத்தினால் வெற்றிகொள்ள முடியாத பயங்கரவாதிகளின் நோக்கத்தை, வேறு அரசியல் சூழ்ச்சிகள் மூலம் வென்றுகொடுப்பது, இலங்கை மற்றும் சர்வதேச பயங்கரவாத ஆதரவாளர்களின் முயற்சியாக அமைந்துள்ளது.