![]()
![]()
எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக களமிறங்கியுள்ள மைத்திரபால சிறிசேன நாள்தோறும் அரச மாளிகையின் அந்தரங்களை போட்டுடைத்து வருகின்றார். கடந்தவாரம் தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் பிரித்தானியாவின் பக்கிங்காங் பலஸிலிந்து பல்லாயிரம் கோடி பெறுமதியான குதிரை ஒன்று கொண்டுவரப்பட்டதாகவும், ஒய்வுநேரங்களில் கொழும்பு அரச மாளிகையிலிருந்து ஹெலிக்கொப்டரில்
புறப்படும் மஹிந்தவின் இளவரசன் நுவரேலியாவில் பராமரிக்கப்படுகின்ற குதிரையில் ஏறிச் சவாரி செய்துவிட்டு இரு மணி நேரங்களில் மீண்டும் அரச மாளிகைக்கு திரும்புகின்றார் என்றும் இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுவது மக்களின் பணம் எனக்குறிப்பிட்ட அவர் இது தொடரவேண்டுமா என்பதை என் தங்கச் செல்லங்களே முடிவெடுங்கள் என்றார்.
மைத்திரியின் இக்கூற்றுக்கு தனது பிரச்சாரக்கூட்டமொன்றில் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ச, எனது புத்திரன் குதிரையில் ஏறுவதற்கே ஆசைப்படுகின்றான் என்றும் அதில் தப்போதும் இல்லை என்றும் கூறிய அவர் , மைத்திரியின் மகன் பாசிக்குடாவில் உதவி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மகனின் மனைவி மீது ஏற முயற்சித்தாக தெரிவித்துள்ளார்.