![](http://4.bp.blogspot.com/-D6ur7tObk5I/VYGg5jQZDaI/AAAAAAAApBA/TdKf6vQbU2U/s200/talibans%2Bin%2Bnorway%2B1.jpg)
உலகின் அதிபயங்கரவாதப்பட்டியலில் இடம்பெறும் தலிபான்களின் உயர்மட்ட மனிதவிரோதிகள் நோர்வேயின் அனுசரணையுடன் லீமுசின் எனும் உயர்தர விலையுயர் கார்களின் அழைத்து வரப்பட்டு லோரன்ஸ்கூ விலுள்ள லொஸ்பி கொட்டேலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்றே ஆப்பாகானிஸ்தான் உயர்மட்டு அரசியில்தலைவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
செவ்வாய் இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் சமாதானஉடன்படிக்கைக் கருத்துக்களத்தில் பங்குபற்று முகமாகவே இவர்கள் அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் போர்க பிரண்ட ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இந்த கருத்துக்களமானது ஓஸ்லோவில் அமைந்துள்ள ஒஸ்லோ போரூமில் நடைபெறுகிறது.
இது உலகிலுள்ள மிகச்சிறந்த சமாதானத்தரகர்கள் இந்தக்கருத்துக்களத்தில் பங்குபற்றுகிறார்கள். இக்கருத்தரங்கு பற்றி ஊடகங்கள் கேள்விகளை முன்வைத்தபோது இக்கருத்துக் களத்துக்கான காரணம் ஒன்றாக இல்லாது வேறு வேறு கோணங்களில் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இக்கருத்துக்களம் கலந்துரையாடல் கருத்துக்களம் என்பது சரியானது. இங்கே இதுவரை எந்தவிதமான சமாதான உடன்படிக்கைகளும் தயாரிக்கப்படவில்லை என்பதையும் அமைதியான முறையில் இருபகுதியினரையும் ஒரு மேசைக்குக் கொண்டு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வைப்பதற்கான முயற்சியே என்பதை நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் உறுதி செய்தார். இது எமக்கு புலிகளை பொதுமேசைக்கு அழைத்துவந்து கூட்டிவைத்துக் கும்மியடித்தது நினைவுக்கு வருகிறது.
இந்த அதிரடி கருத்துக்களமானது பலநோர்வேயியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எதற்காக பயங்கரவாதிகளை நாட்டுக்குள் விட்டீர்கள் எனவும்> நோர்வேக்கு எதற்கு இந்தத் தேவையில்லா வேலை எனவும்> நாளைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இதுவழி வகுக்கும் எனவும் பலகருத்துக்கள் மக்களிடையே நிலவுகின்றன.
நோர்வேயின் வெளிநாட்டு அரசியல் நடவடிக்கைகளின் பின்னர் ஏற்படும் மிகப்பெரிய தாக்கங்களை அரசியல் அவதானிகள் கண்டிருப்பார்கள். இலங்கை புலிகளின் சமாதானத்துக்கான அனுசரணை எப்படி முடிந்தது என்பதையும்> இந்நடவடிக்கை முற்றுப்பெறமுன்னர் நாம் அனுசரணையாளராக வருகிறேன் என எரிக் சூல்கெய் நேபாளத்தில் மாக்சிஸ்டுக்களின் பிரச்சனையில் மூக்கு நோட்டியதையும். மத்திய கிழக்கு உடன்படிக்கை எப்படி முடிந்தது என்பதையும் நாம் ஒப்பிட்டுப்பார்த்தால் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கப்போகிறது என்பது புரியும்.
நோர்வே மக்களின் இன்றைய கேள்வி இதுதான் "வேலிக்குள் உள்ள ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்டுவிட்டு குத்துகிறது குடைகிறது"என்றாகாது இருந்தால் சரி
![](http://4.bp.blogspot.com/-D6ur7tObk5I/VYGg5jQZDaI/AAAAAAAApBA/TdKf6vQbU2U/s640/talibans%2Bin%2Bnorway%2B1.jpg)
![](http://2.bp.blogspot.com/-XuwMHDupzOE/VYGg5qCJesI/AAAAAAAApA8/ZCtSMaSwOYA/s640/talibans%2Bin%2Bnorway%2B2.jpg)
செய்தி
நோர்வே நக்கீரா 16.06.2015.