Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

நியூசிலாந்தில் தைப்பொங்கல் விழா 2016 .

$
0
0
ஜனவரி 16 ம் திகதி ஆக்கிலாந்து மவுன்ரோஸ்கில் இன்ரமீடியற் பாடசாலை மைதானத்தில் New Zealand Sri Lanka forced migrants' support groupஇனரால் தைப்பொங்கல் விழா வெகு விமரிசையாக நடாத்தப்பட்டுள்ளது. இவ் அமைப்பு நியூசிலாந்தில் குடியேறும் தமிழ் அகதிகளுக்கு பலதரப்பட்ட மீள் குடியேற்ற உதவிகளை வழங்குகின்றது.

இவ் விழாவில் கௌரவ கௌரவ Phil Goff (Member of Parliament from labour party) , Priyanca Radhakrishnan (candidate for Mt.Roskill electorate for Labour Party) , Mr Venkat Raman (Chief Editor, Indian News Link) Mr Abann Kamyay Yor (General Manager Auckland Refugee Community Coalition) , Mr. Makasivam ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரை மற்றும் வாழ்த்துக்களையும் வழங்கி விழாவைச் சிறப்பித்தனர்.

பொங்கல் விருந்தோம்பல் நிகழ்வுடன் சிறுவர்களுக்கான மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் பரிசில்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இவ் அமைப்பு 2008 ம் ஆண்டு நியூசீலாந்தில் தஞ்சம் கோரும் மற்றும் அகதிகளுக்கும் உதவவும் அவர்ளுக்கு நியூசீலாந்தில் மீள் குடியேற்றத்திற்கு உதவும் பொருட்டும் உருவாக்கப்பட்டதாகும்.
கடந்த 8 வருடங்களாக தையல் இ கேக் அலங்காராம் மற்றும் கணனிப் பயிற்சி நெறிகளை இலவசமாக வழங்குவதுடன் பயிற்சியின் நிறைவில் தகுதி வாய்ந்த சான்றிதல்களையும் அதற்கு வேண்டிய உபகரணங்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

அத்துடன் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்குரிய பயிற்சி நெறி இ உளவியல் பயிற்சி நெறிகள் இசமையயல் கலை பறிற்சி நெறிகள் என்பவற்றுடன் குடிவரவு விண்ணப்பம் தொடர்பான ஆதரவு ஆவணங்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மேலும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு இதுவரை 500 மப ஆடைகளை அனுப்பி உதவியுள்ளதாகவும் அமைப்பின் தலைவர் குணசிங்கம் ஸ்ரீறஞ்சிதராஜா தெரிவித்தார்.








Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>