![](http://3.bp.blogspot.com/-dVXFA4Lzj74/W-LUCUd5QHI/AAAAAAAAs3c/g9KGY-edeU4O2ko-DoOsrlRnRbokp66IgCLcBGAs/s200/sajith%2Band%2Branil.jpg)
அவ்வாறு தன்னிடம் ஜனாதிபதி வேண்டியது உண்மைதான் என்று தெரிவித்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிறேமதாஸ, தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பயந்து இதனை நிராகரிக்கவில்லைஎன்றும் மாறாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது கொள்கை அடிப்படையில் சிறந்த விடயமல்ல எனக் கருதியதாலேயே அவ்வாறு நிராகதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ள சஜித் பிரேமதாச, கொள்கை அடிப்படையில் சிறிசேனவின் இந்த வேண்டுகோளை நான் நிராகரித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கா ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்படவேண்டும் என்பதே அவ்வேளை எனது நோக்கமாகயிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.