Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

பெண்களின் அறைகளில் இரகசியக் கமரா பொருத்தி இன்பம் கண்ட ஆசாமியின் வாக்குமூலம்.

$
0
0
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் பெண்களுக்கென விடுதியொன்றை அமைத்து அவர்களின் அறைகள் மற்றும் குளியல் அறைகளில் இரகசிய கமரா பொருத்தி செயற்பாடுகளை பதிவு செய்த ஆசாமி ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் தனது செயற்பாடு தொடர்பில் நீதிமன்றில் பரபரப்பு வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள்தங்கும் விடுதி இயங்கி வந்தது. இந்த விடுதியை சம்பத்ராஜ் என்கிற சஞ்சீவி (48) நடத்தி வந்தார். இந்நிலையில், விடுதியில் பெண்களின் படுக்கை அறை, குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்திருந்தது நேற்று முன்தினம் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், அறைகளில் இருந்த ரகசிய கேமராக்களை கைப்பற்றினர்.

"வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரிடம் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் பெண்கள் தங்கும் விடுதி நடத்தினேன். கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தேன். முன்பணமாக ரூ.50 ஆயிரமும், வாடகையாக மாதம் ரூ.24 ஆயிரமும் கொடுத்தேன். இது 2 ஆயிரத்து 100 சதுரஅடியில் 3 படுக்கை அறை கொண்ட வீடு ஆகும். இங்கு 7 பெண்கள் தங்கி இருந்தனர்.

எனது மனைவி சித்தா மருத்துவர். அவர் சித்தா மருத்துவம் பார்ப்பதற்காக படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீட்டில் போட்டிருந்தேன். ஹாலில் உள்ள ஒரு பகுதியை சித்தா மருத்துவத்துக்கான அலுவலகமாக பயன்படுத்த முடிவு செய்திருந்தேன். அங்கு தங்கியிருந்த 7 பெண்களும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் பகலில் ஹாலை சித்தா மருத்துவத்துக்கு பயன்படுத்த அனுமதித்தனர். எனவே பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு அங்கு வந்துவிடுவேன்.

இது பெண்களின் அறைகளில் கேமராவைப் பொருத்த எனக்கு வசதியாகிவிட்டது. இதற்காக நண்பர் ஒருவர் மூலம் கேமரா தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டேன். ஆன்லைனிலும் படித்தேன். பின்னர் ஒவ்வொரு கேமராவையும் நானே ரகசியமாக பொருத்தினேன்.

இந்த கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். அவற்றின் விலை தலா ரூ.2,500 ஆகும். இந்த கேமராக்களில் மெமரி கார்டையும் பொருத்தியிருந்தேன். இந்த கேமரா ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டும் தானாக இயங்கி காட்சிகளை பதிவு செய்யும். மற்ற நேரங்களில் இயங்காது.

இந்த கேமராக்களில் மெமரி கார்டும் இருக்கும். வீடியோ காட்சிகள் அந்த கார்டில் பதிவாகி இருக்கும். 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை பராமரிப்பு பணி என்று அவர்களின் அறைக்குள் சென்று மெமரி கார்டை எடுத்து விட்டு, புதிய மெமரி கார்டை வைப்பேன்.

பின்னர் அந்த கார்டை எடுத்து லேப்டாப் அல்லது செல்போனில் போட்டுப் பார்ப்பேன். இந்நிலையில், வைஃபை (wifi) தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் இருப்பதை அறிந்து, அவற்றை வாங்கி பெண்களின் அறைகளில் மாட்டினேன். எல்இடி பல்பு வடிவில் இந்த கேமராக்கள் இருக்கும்.

இந்த கேமராக்களில் மெமரி கார்டை கழற்றத் தேவையில்லை. வைஃபை மூலம் நேரடியாக எனது செல்போனுக்கு தொடர்பு படுத்தி பெண்கள் அறைகளில் நடக்கும் காட்சிகளை பார்ப்பேன்"என்று சஞ்சீவி வாக்குமூலம் அளித்தார் என்று போலீஸ் கூறியதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>