![](http://4.bp.blogspot.com/-J0sJrQFqG1s/Ur2KJJnIeII/AAAAAAAAWdA/KIuYeR1wy1A/s320/prabaharan.jpg)
விசாரணைகள் முடிந்த பின்னர் சந்தேக நபர் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் பிரபாகரனை திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்துவார்கள் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக நாவற்குடா பகுதியில் இருக்கும் இராணுவ முகாம், அந்த பகுதியின் இராணுவ நடமாட்டங்கள், இராணுவ வாகனங்களின் நடமாட்டங்களையெல்லாம் அவர் படம் பிடித்திருந்தார் எனவும் அஜித் ஒரு சுற்றுலா பயணியான அவர் எதற்காக இராணுவ இலக்குகள், இராணுவத்தினரை மட்டும் குறிவைத்து படம் பிடிக்கவேண்டும் என்றும் பொலிஸார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது கெமராவில் வேறு எந்த படங்களும் எடுக்கப்படவில்லை என்று கூறிய பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு விவகாரங்களை மட்டும் அவர் குறிப்பாக படம் பிடித்தது ஏன் என்பதுதான் தங்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள் ளனர். இவரது கைது குறித்தும், இலங்கையில் இவரது நடத்தை குறித்தும் இந்திய தூதரகத்திற்கு உரிய முறையில் தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும், பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளரார்.
அத்துடன் இலங்கைக்கு இந்தாண்டு சுற்றுலா வீசாவில் பயணம் செய்த 12 இலட்சம் பேரில் வெறும் ஆறுபேரை மட்டுமே நாங்கள் கைது செய்திருக்கிறோம். அந்த ஆறு பேரைக்கூட குறிப்பிட்ட இலங்கை சட்டங்களை மீறி செயற்பட்டதற்காக மட்டுமே கைது செய்திருக்கிறோம். இதை நாங்கள் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்யும் நடைமுறை தான் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
உதாரணமாக இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நின்று சுற்றுலாப் பயணிகள் யாரும் படம் எடுக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மாதிரியான விதிகள், கட்டுப்பாடுகள் இலங்கையிலும் இருக்கின்றன என்றும்இலங்கை விதிகளை மதித்து நடக்கும் சுற்றுலாப் பயணிகள் யாரையும் தாம் கைது செய்வதில்லை என்றும் கூறியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளரான தமிழ் பிரபாகரன் 'புலித்தடம் தேடி இரத்த ஈழத்தில் 25 நாட்கள்'என்ற புத்தகத்தை எழுதி இந்தியாவில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.