![](http://4.bp.blogspot.com/-CWSIlRIQm8Y/UsreT4aif6I/AAAAAAAAAbc/jUcH3FeB-hI/s320/mansure_002.w540.jpg)
போனால் போகட்டுமென்று இந்த முறைதான் தனது சொந்தப் படத்துக்கு சிக்க னமாக அதிரடி என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. கலைப்புலி எஸ் தாணு , கலைப்புலி சேகரன் கலந்து கொண்டனர். மன்சூரலிகானின் மகன்களும் சிறப்பு விருந்தினர்களும் சேர்ந்து பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் வடிவில் பிரத்யே கமாகச் செய்யப்பட்ட கேக்கினை வெட்டினார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி இசையமைப்பதுடன் இயக்கவும் உள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். படத்திற்கு அதிரடி என்று பெயர் வைத்து விட்டு துவக்கவிழாவை அதிரடியாக நடத்தாமல் இருந்தால் நன்றாக இருக்குமா..? அதனால், அதிரடி படத்துவக்க விழாவில், தனது வயிற்றின் மீது 125 கிலோ எடை உள்ள நபரை நிற்க வைத்து உடற்பயிற்சி மன்சூரலிகான் உடற்பயிற்சி செய்தார். தொடர்ந்து அவரது வயிற்றில் மிகப்பெரிய கருங்கல் வைத்து அதனை ஸ்டண்ட் கலைஞர்கள் சம்மட்டியால் உடைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து ஓடுகளின் மீது நெருப்பை பற்ற வைத்து தலையால் உடைக்கையில் எதிர்பாராத விதமாக தலையில் தீ பற்றிக் கொண்டது. உடனே உதவியாளர் ஓடிவந்து கோணிப்பையால் தீயை அணைத்தார். இதனால் சற்று பர பரப்பு ஏற்பட்டது.
![](http://4.bp.blogspot.com/-eRkm7cD_XhM/Ust8Bbs_m1I/AAAAAAAAAcM/lZ6Zv2uZG6s/s320/mansure_002.w540.jpg)
![](http://3.bp.blogspot.com/-mmWkFNoFmLs/Ust8CYCfJUI/AAAAAAAAAcU/_CekhoXB7ZI/s320/mansure_003.w540.jpg)
![](http://1.bp.blogspot.com/-_tcJnm5czyc/Ust8LsuF6MI/AAAAAAAAAcc/1opo7gTBHDI/s320/mansure_004.w540.jpg)
![](http://2.bp.blogspot.com/-RSj7OhTIzzI/Ust8NfFwr8I/AAAAAAAAAck/9BimzuVkhNw/s320/mansure_005.w540.jpg)