
கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் சாமி அறையில் நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து மறைத்து வைத்திருந்த நிலையிலேயே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பட்டிப் பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துசார தலை மையில் உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத்,பொலிஸ் கொஸ்தா சுபசிங்ஹா, பொலிஸ் கொஸ்தா ஆராட்சி அடங்கிய குழுவினராலேயே மேற்படி மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மதுபானங்களையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவரை யும் நேற்று களுவாஞ்சிக்குடி நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது 45000 தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இவ்வாறான சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நிலையங்களால் இப் பகுதி வயது குறைந்த மாணவர்கள் மதுபான பழக்கத்துக்குள்ளாகி வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


