
அண்டவெளி,ஜோதிடசாஸ்திரம்,மதசம்பிரதாயங்கள் குறித்து தங்கள் கருத்துக் களை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள். சுற்றித் திரிவதில் சுகம் காண் பவர்கள்.நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகளாக இவர்களைப் பணியமர் த்தினால் விருப்பத்துடன் அப்பணியை ஏற்று நிறுவன வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பார்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சில நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். இவர் களின் மிடுக்கான நடை, உடை, பாவனை ஆகியவை மிரட்டுவது போல் இருந் தாலும், குழந்தை மனதுடை யவர்களாகவே இருப்பர்.
சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர் தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். இவரின் புரட்சி கரமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட பலர் இவர்களுக்கு நண்பர்களாகி விடுவர்.
இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப்போல் வெளிப்பாடு செய்து கொள்வது இவர்கள் மிகமுக்கியமான குணாதிசயம். வெற்றியை மட்டுமே குறிக் கோளாக எடுத்துக்கொள்வதால் இடையில் வரும் வேகத் தடையானவற்றைக் கண்டுகொள்வதே இல்லை.
துன்பங்களைக் கடந்து எப்படியும் வென்று விடுவார்கள். ஒரு இடத்தில் ஒரு மணிநேரம் இவர்களைப் பேசாமல் இருக்க வைப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகத் தைரியமாக அறிவிக்கலாம். இவர்களது பேச்சை நிறுத்துவது அவ்வ ளவு கடினம். எழுத்தாற்றல் மிக்க இவர்கள் பிறர் எழுத்துக்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்.
சீர் திருத்தவாதியான இவர்கள் அரசாங்கத்திற்கே சில சமயங்களில் சிறப்பான யோசனைகள் சொல்லி அசத்திவிடுவார்கள். பேசும்போது குரலை ஏற்றி, இறக்கி கையை ஆட்டிக்கொண்டே பேசுவதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொள்வர். மற்றவர்களின் விமர்சனத்தைக் கொஞ்சங்கூடக் கண்டு கொள்ளாத இவர்கள், தன்கருத்துக்களை சபையில் ஏற்றும் வரை சளைக்க மாட்டார்கள்.
உலகம் உருண்டைதான் என்று சொன்னால் இல்லை... அது சதுர வடிவம் உடையது என விதண்டா வாதமும் பேசுவார்கள். தான் சொன்னதற்கேற்ப உலகப்படத்தையே மாற்ற முயற்சிப்பார்கள். இந்த விதண்டாவாத குணத்தை மட்டும் மாற்றி, உருப்படியான விஷயங்களில் தன் கருத்தைச் செலுத்தினால் இவர்களின் முன்னே ற்றத்தை யாராலும் தடுக்க இயலாது. இவர்கள் திட்டம்போட்டு வைத்திருக்கும் சில அருமையான விஷயங்களை, வெளியில் முந்திரிக்கொட்டை மாதிரி சொல்லி விடுவார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு புத்திசாலி, அதை செய லுக்குக் கொண்டு வந்து பணம் சம்பாதித்து விடுவார்.
4ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
ராமானுஜர் : 04.04.1917
கணிதமேதை ராமானுஜம் : 22.12.1887
திருப்பூர் குமரன் : 04.10.1904
சர்தார் வல்லபாய் படேல் : 31.10.1875
தாதாபாய் நௌரோஜி : 04.09.1825
ராஜாராம் மோகன்ராய் : 22.05.1772
நாளை ஐந்தாம் எண்காரர் பற்றி பார்ப்போம் !!!!