இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் அத்து மீறல்கள் தடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் பின்னரும் 38 இந்திய மீனவர்களும் ஆறு படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுவதனால் கடல் வளங்கள் அழிவடைவதாகத் தெரிவித்துள்ளார்.