மாலைதீவின் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹான் பாமி கத்துக்குத்துக்கு இலக்கான நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 3 மணித்தியால சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மாலைதீவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக அவருடைய சகோதரர் குறிப்பிட்டுள்ளதுடன் இந்தக் கத்திக்குத்து தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்பதுடன் அரசியலில் அவருடன் பகையை கொண்டிருப்பவர்களாலேயே இந்த தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கத்திக்குத்து சம்பவம் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாலைதீவு தகவல்கள் தெரிவிக்குகின்றன.