Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

அமெரிக்கா போர் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கின்றது. By K. Ratnayake

$
0
0
மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை (UNHRC) கூட்டத்தில், இலங்கை போர் குற்றங்கள் சம்பந்தமாக இன்னொரு தீர்மானத்தை வாஷங்டன் கொண்டுவரும் என சனிக்கிழமை கொழும்பில் அறிவித்தார் –இது மூன்று ஆண்டுகளில் மூன்றாவது தீர்மானமாகும்.

கொழும்பின் "பொறுப்புடைமையில் முன்னேற்றமின்மை மற்றும் நாட்டில் மனித உரிமைநிலைமை சீரழிந்து வருகின்றமையின்” பிரதிபலனாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிஸ்வால் குறிப்பிட்டார். ஐ.நா. விசாரணையொன்று, 2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரின் இறுதி மாதங்களில் குறைந்தது 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்க தீர்மானத்துக்கு தகவல்களை சேகரிக்க வந்த, உலகளாவிய போர் குற்றங்கள் தொடர்பான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ராப்பின் விஜயத்தின் பின்னர் இரண்டு வாரங்களில், கடந்த வெள்ளியன்று இந்த அமெரிக்க அதிகாரி மூன்று நாள் பயணமாக இலங்கை வந்தார்.

சனிக்கிழமை கொழும்பு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிஸ்வால், இலங்கை போர் குற்றங்கள் பற்றி விசாரணை செய்வதில்"முன்னேற்றம் காணாமை", "எனது அரசாங்கத்திலும் சர்வதேச சமூகத்திலும் அதிருப்தி மற்றும் சந்தேகத்துக்கு வழிவகுத்துள்ளது” என்றார். பெரும் வல்லரசுகளின் மத்தியில் "பொறுமை குறைந்து” வருகின்றது என அவர் கூறினார்.

தீர்மானம் ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்குமா என்ற கேள்வியை தவிர்த்த அவர், “தீர்மானத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்க இப்போது நேரம் அதிகம்” என்றார். அமெரிக்க தூதர், பெளத்த பிக்குகள் தலைமையிலான வலதுசாரி கும்பல்கள், முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ வழிபாட்டு தலங்கள் மீது அண்மையில் நடத்திய தாக்குதல்கள் பற்றி குறிப்பிட்டார். இந்த வன்முறை தாக்குதல்களை அரசாங்கமோ பொலிசோ தடுக்கவில்லை.

விளைபயனுள்ள வகையில் பிஸ்வாலை அவமதித்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அவரை சந்திக்காததற்கு “இறுக்கமான நிகழ்ச்சி நிரல்களை” காரணம் காட்டினார். இலங்கை ஜனாதிபதி எந்தவொரு யுத்த குற்ற விசாரணை பற்றியும் கலக்கம் கொண்டுள்ளார். ஒரு சர்வதேச விசாரணை, குடிமக்களை படுகொலை செய்தமைக்கு பொறுப்பாக உயர்மட்ட இராணுவ தளபதிகளை மட்டும் சம்பந்தப்படுத்தாது, மாறாக ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலருமான கோட்டாபய ராஜபக்ஷவையும் சம்பந்தப்படுத்தும்.

கொழும்பின் நீண்ட உள்நாட்டு யுத்தத்துக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை அம்பலப்படுத்திவிடும் என்ற காரணத்தால், அது இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களைப் பற்றி ஆழமாகச் செல்லும் விசாரணை ஒன்றை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, வாஷிங்டன் பிராந்தியத்தில் தனது சொந்த மூலோபாய நலன்களை முன்னெடுக்க இந்தப் பிரச்சினையை பயன்படுத்த முற்படுகிறது. குறிப்பாக, சீனாவை இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதை இலக்காகக் கொண்ட, ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவிற்கு மீண்டும் திரும்பும்"கொள்கைக்கு கொழும்பின் முழு ஆதரவை அது கோரி வருகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கம் பெய்ஜிங் உடனான அதன் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை கைவிட வேண்டும் என வாஷிங்டன் விரும்புகிறது. எனினும், நெருக்கடி நிறைந்த இலங்கை அரசாங்கம், நிதி மற்றும் இராணுவ தளவாடங்களுக்கும் எந்தவொரு யுத்த குற்ற விசாரணையையும் தவிர்க்க சர்வதேச அரசியல் ஆதரவை பெறவும் சீனாவை நம்பியிருக்கின்றது.
கொழும்பு மீதான அழுத்தத்தை உக்கிரமாக்கும் நகர்வு, பிப்ரவரி 3 வெளியான நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கத்தில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தனது நிலைப்பாட்டை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று அது ஒபாமா நிர்வாகத்துக்கு அழைப்பு விடுக்கின்றது. வாஷிங்டனின் அனைத்து போர் குற்றங்களுக்கும் சளைக்காமல் வக்காலத்து வாங்கும் இந்த செய்தித்தாள், பொறுப்புடைமை சம்பந்தமாக இலங்கை மீது முன்வைக்கும் கோரிக்கைகளை எந்தவகையிலும் தளர்த்துவது, "துன்பகரமானதாக இருப்பதோடு தாம் வெகுஜன கொலைகளுக்கு பதிலளிக்க வேண்டியதே இல்லை என்று பொது அதிகாரிகளுக்கு சமிக்ஞை செய்வதாக அமைந்துவிடும்", என்று கபடத்தனமாக அறிவிக்கின்றது.

இலங்கை அரசாங்கம், பெண்கள் பிரச்சினைகள் தொடர்பான அமெரிக்க தூதர் காத்தரின் ரஸ்ஸல்லுக்கு திங்களன்று விசா மறுத்ததை அடுத்து, வாஷிங்டனுக்கும் கொழும்புக்கும் இடையேயான உறவுகள் மேலும் கசந்திருந்தன. ரஸ்ஸல் பிப்ரவரி 10 மற்றும் 11 திட்டமிட்டிருந்த ஒரு உயர் மட்ட விஜயத்தை இரத்துச்செய்ய தள்ளப்பட்டார்.

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அமெரிக்கா இலங்கையை மோசமாக காட்ட முயற்சிக்கின்றது என்று அறிவித்து, பிஸ்வாலின் விமர்சனங்களை நிராகரித்தார். கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் வழிபாட்டு தலங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் “தனியான சம்பவங்கள்” என்று பீரிஸ் கூறினார். தாக்குதல்களை நடத்திய சிங்கள, பெளத்த பேரினவாத குழுக்களுக்கு நியாயத் தன்மையை கொடுத்த அவர், அவை "சமூக எதிர்வினைகள்"என்று கூறினார்.

பீரிசின் கருத்துக்கள் ஒரு புறம் இருக்க, இராஜபக்ஷ அரசாங்கம் அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. இராஜபக்ஷ, யுஎன்எச்ஆர்சியில் ஒரு புதிய தீர்மானத்தை கொண்டுவர வேண்டாம் என பிஸ்வாலுக்கும் பிற அமெரிக்க அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்க தனது செயலாளர் லலித் வீரதுங்கவை சமீபத்தில் வாஷிங்டனுக்கு அனுப்பினார். வீரதுங்க, போரினால் அழிந்த பகுதியில் தமிழ் மக்களின் நிலைமையை "முன்னேற்றுவதாக"காட்டும் ஒரு அறிக்கையை விநியோகித்து அதிகாரிகளுடன் பேசினார். எனினும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் வீடுகள், சுகாதார வசதிகள், குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர். எந்தவொரு யுத்த குற்ற விசாரணையும் "நாட்டில் பெரும் குழப்பத்தை"உருவாக்குவதோடு "இராணுவத்தின் மன உறுதியை குறைக்கும்"என்று வீரதுங்க ராய்ட்டர்ஸ் செய்திக்கு கூறினார்.

இலங்கை அரசாங்கம், அமெரிக்க செல்வாக்கு நிறுவனங்களான தொம்சன் ஆலோசனை குழுவை மாதம் 66,600 டாலர்களுக்கும், மெஜோரிட்டி குழுவை மாதம் 50,000 டாலர்களுக்கும் வாடகைக்கு பெற்றுள்ளது. வாஷிங்டனில் நடக்கும் ஒரு நிகழ்வில் வீரதுங்கவையும் இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாட் கப்ராலையும் சந்திக்க விடுக்கப்பட்ட ஒரு அழைப்பிதழ் கூறியதாவது: “சீனா ஏற்கனவே இலங்கையில் பெருமளவு ஊடுருவி வருகின்றது, ஆனால் எங்கள் சிறப்பு பிரதிநிதிகள், அமெரிக்காவுடனான உறவுகள் இன்னும் வலுவாக மேம்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய விரும்புகிறனர்."
இராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சர்களை அரசியல் ஆதரவு தேடி வியட்நாம், பிரேசில், பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் குவைத்துக்கும் அனுப்பியுள்ளார். பீரிஸ், கடந்த புதன்கிழமை, அமெரிக்க தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு புது டெல்லியின் உதவியை கேட்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்தார். ஒரு இந்திய அதிகாரி, "நாங்கள் அவர்களுக்கு செவிமடுத்தோம், ஆனால் நாம் ஜெனீவாவில் என்ன செய்வோம் என்பது பற்றி எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை"என எக்ணோமிக்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.

சீனா, அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளது. டெய்லி மிரர் பத்திரிகைக்கு கொழும்பில் உள்ள சீன தூதர் வூ ஜியங்காவோ ஒரு மின்னஞ்சல் அனுப்பி, பெய்ஜிங் "ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழுவாது இலங்கைக்காக தொடர்ந்து பேசுவோடு""இலங்கை அடையும் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும்", என்று தெரிவித்துள்ளார்.

தனது விஜயத்தின் போது, பிஸ்வால் எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் (யூ.என்.பி.) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டமைப்பு தலைவர்கள், ஒரு சர்வதேச யுத்த குற்ற விசாரணைக்கான தமது கோரிக்கையை மீண்டும் விடுத்தனர். தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டமைப்பு, ஒரு அதிகார பரவலாக்கல் வடிவில் இராஜபக்ஷ அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெறும் ஒரு வழிமுறையாக இந்த விசாரணையை கருதுகிறது.

பிஸ்வாலை சந்தித்த பின்னர், யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது கட்சி –இதற்கு முன்னர் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்த- அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை செயல்படுத்த உதவத் தயாராக இருப்பதாக இலங்கை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக் குழுவானது தமது போர் குற்றங்களை மூடிமறைக்க 2010ல் இராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நிறுவப்பட்டது. விக்கிரமசிங்கவின் கருத்து, யூ.என்.பி. வாஷிங்டனின் பூகோள மூலோபாய கோரிக்கைகளை ஆதரிக்கின்றது என்ற செய்தியை அமெரிக்காவுக்கு தெரிவிக்கும் தெளிவான சமிக்ஞை ஆகும்.

இராஜபக்ஷ அரசாங்கத்தை போலவே, யூஎன்பீயும் சிங்களப் பேரினவாதத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த வலதுசாரி அமெரிக்க-சார்பு கட்சியே, 1983ல் தீவில் இனவாத யுத்தத்தைத் தொடங்கி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முன்னெடுத்ததோடு ஒவ்வொரு கட்டத்திலும் அதை ஆதரித்தது. யூஎன்பீ ஆட்சிக்கு வந்தால், அதுவும் இராஜபக்ஷ அரசாங்கம் போலவே உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதில் இரக்கமற்றதாக இருக்கும்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>