பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக குருணாகல் பொல்பித்திகம தேசிய பாடசாலையில் கல்வி கற்றுவரும் 16 வயதான கனேசிகா ரணதுங்க என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மூன்றாவது சந்தர்ப்பமாகும்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய இவர் பெறுபேற்றுக்காக காத்திருக்கும் குறித்த மாணவி செல்லிடப்பேசியில் காதலனுடன் பேஸ்புக் மூலம் உரையாடிக் கொண்டிருந்த போது, மாணவியின் தாய் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் தாயுடன் கோபித்துக் கொண்ட குறித்த மாணவி, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவருவதுடன் மேலதிக விசாரணைகளை பொல்பித்தகம பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.