![](http://1.bp.blogspot.com/-4pRKZ1Zr5yE/UxCZ1BjmKRI/AAAAAAAAmjw/GpcX8cQWyZI/s320/notice+about+priest.png)
அவர்களின் அயராத உழைப்பினாலும், ஏழைகளுக்கு என்றென்றைக்கும் உதவும் என்ற மேலான எண்ணத்தினாலும் சேர்க்கப்பட்ட உடமைகளையும், சொத்துக்களையும் உண்டு குடித்து உல்லாசம் அனுபவிப்பவர்கள் இன்று எத்தனை பேர்?
அது மட்டுமல்லாது குருத்துவத்தின் சிறப்பினை சீரழிக்கும் நோக்குடனும், சிறப்பாக சேவைசெய்யும் குருக்களின் மரியாதையை குறைக்கும் படியாகவும் பெண்களுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதும், காமசேட்டைகள் செய்வதும் இப்போது கத்தோலிக்க குருமாரிடையே பெருகி வரும் மிக கேவலமான பழக்கங்களாகும்.
இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் பொதுமக்களால் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் பாதர் டயஸ் அவர்களின் காம விளையாட்டை அம்பலப்படுத்தும் துண்டுப்பிரசுரமாகும்.
இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடும் குருக்களை ஆயர் பாராமுகமாக இருப்பது ஏன்?
இதற்கு ஆயரும் உடந்தையா?
இல்லை எனில் இவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடபடிக்கை என்ன?
இவ்வாறான குருக்கள் இந்த மறைமாவட்டத்திற்கு தேவையா?
இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிராக ஐ.நா சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனம் ஒன்று வத்திக்கானை எச்சரித்துள்ளது. இந்நிலை மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கும் வேண்டுமா?
பொது நிலையினரை பிரசங்கங்களின் ஊடாக ஏசுவதும், மறைமுகமாக மனம் நோகச்செய்வதும், கள்ளத் தந்ரோபாயங்களால் திருச்சபையின் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களை வெட்டிவிடுவதும், ஆலயத்திற்கு வரும் இளைஞர்களை வைத்து மதுபானம் கொள்வனவு செய்வது போன்ற ஈனத்தனமான காரியங்களை விட்டுவிட்டு மறைபணியினை ஆற்றவேண்டும் என்பதே பொது நிலையினரின் விருப்பம்.
அவ்வாறு நடக்க இயலாதவர்கள் குருத்துவத்தை விட்டுவெளியேறுவது சிறந்தது என்பதும் பொது நிலையினரின் ஆதங்கமுமாகும்.
இனிமேல் பொதுநிலையினர் இதில் கவனமாக இருப்பார்கள், இருக்கவும் வேண்டும் என்பதற்கு இந்த மடல் ஆதாரமாகும்.
![](http://1.bp.blogspot.com/-4pRKZ1Zr5yE/UxCZ1BjmKRI/AAAAAAAAmjw/GpcX8cQWyZI/s320/notice+about+priest.png)