![](http://4.bp.blogspot.com/-MkD5p4W3Pok/UyCAONCl_sI/AAAAAAAAXAc/RVHw06QPY0g/s320/keheliya.jpg)
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் சர்வதேசத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தம் முடிவடையவில்லை. விளையாட்டின் மூலம், சர்வதேசத்தினால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தக்க பதிலடியை வழங்க முடியும். அதனை நாங்கள் சாதித்துள்ளோம். ஆசிய மட்டத்தில், சிறந்த விளையாட்டு வீரர்களையும், அணிகளையும் நாம் உருவாக்கியுள்ளோம். அதுவே சிறந்த ஆச்சரியம் என்றால், அது மிகையில்லை.
மெனிக்ஹின்ன, ஏ. ரட்னாயக மத்திய மகா வித்தியாலயத்தில், வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர், விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.