கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட மூவர் மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும், நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரிடம் சுமார் 8 தசம் 9 கிராம் ஹஷீஸ் போதைப்பொருளைவழங்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
போதைப்பொருள் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரை சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம தெரிவிக்கின்றார்.
நுகேகொடை நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர்களை நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.