புலிகள் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், புலம்பெயர்ந்து வாழும் சில புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஈழக் கனவு காண்பதுடன் பல்வேறு வழிகளில் தமிழீழத்தை நிறுவும் நோக்கில் இலங்கைக்கு எதிராக பிரச்சார யுத்தம் மேற்கொண்டு வருவதாக களனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
மேலும் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியின் மூலம் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது எனினும் புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் இன்னமும் ஈழக் கனவை விட்டுக்கொடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதனைவிட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காலணித்துவ ஆட்சியாளர்களும் புலி ஆதரவு தரப்பினருக்கு உதவிகளை வழங்கி வருவதுடன் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மீண்டும் நாட்டில் வன்முறைகளை வெடிக்கச் செய்யும் நோக்கில் இவர்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் எனினும் இவற்றை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த தீய சக்திகளுடன் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனினும் மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.