தான் அரசியலில் நுழைந்ததன் காரணம், நாட்டிலுள்ள பெண்களைப் பாதுகாப்பதற்கும், இளைஞர் யுவதிகளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனும் நன்னோக்கிலேயுமே என மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அனர்கலீ ஆகர்ஷா குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“நான் வானிலிருந்து கீழிறங்கி வரவில்லை. எனது தாயும் தந்தையும் கம்புறுப்பிட்டியவைச் சேர்ந்தவர்கள். மாத்தறை மக்களுக்காக எழுந்துநிற்க எனக்கும் உரிமை இருக்கிறது. நாய்கள் குரைப்பதால் மலை பணிவதில்லையே. என்னைத் திட்டட்டும்… நான் திட்ட மாட்டேன்… பெண்களுக்காகவே நான் மாத்தறைக்கு வந்தேன். நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்.
எங்கள் ஜனாதிபதி நாட்டுக்காக நிறையவே செய்திருக்கிறார். மக்கள் அவர் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். என்னதான் சூழ்ச்சிகள் செய்தான் நாங்கள் இம்முறையும் மாகாண சபையில் வெற்றிக் கொடி நாட்டுவோம். அது நிச்சயம்.
நாங்கள் மக்களிடத்துச் செல்லும் போது சிலருக்கு வயிற்றெரிச்சல் வருகிறது. யார் என்ன சொன்னாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றினார் ஜனாதிபதி. அவருக்கு நாங்கள் உதவி செய்ய வேண்டும். என்றாலும் பெரும்பாலானோர் அவரது காலைப் பிடித்து இழுக்க முயற்சிக்கிறார்கள்.”

(கேஎப்)