Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஹக்கீம் பௌத்த - முஸ்லிம் இனங்களுக்கிடையே ஜக்கியத்தை சீர்குலைக்கின்றார்! - விமல் வீரவன்ச

$
0
0
“இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதற்கு தனியார் ஊடக விளம்பரங்களுக்காக இலங்கையில் உள்ள ஒரு தூதுவர் ஆலயத்தில் இருந்து 10 ஆயிரம் மில்லியன் ருபாவுக்கும் மேலதிகமாக பணம் வழங்கப்பட்டுள்ளது. இ;லங்கையில் உள்ள தனியார் விளம்பர நிறுவனமொன்றுக்கு இந்நிதிவழங்கப்பட்டுள்ளமை அரசுக்கு தெரிய வந்துள்ளது.” என அமைசச்ர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதிகளில் உள்ள “சமகிபுர” தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்திற்கு 110.5 மில்லியன் ருபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட வீடமைப்புத் திட்டத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்துஉரையாற்றுகையில் - கடந்த யுத்தகாலத்தில் கொழும்பில் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் விளையாட்டுப் போட்டி ஒன்றுக்குச் செல்வதற்காக பஸ்நிலையத்தில் நின்ற டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி மாணவர்கள் குண்டு வெடிப்பில் இறந்தனர். அதேபோன்று கொழும்பில் சிங்கள “தமிழ்” முஸ்லிம் சகல இனங்களும் அச்சத்துடன் வாழ்ந்தார்கள்.

வெளியே செல்வதற்கும் பஸ்ஸில் அல்லது புகையிரதத்தில் பிரயாணம் செய்வதற்கும் பயப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்களுக்கு இந்தநாட்டில் வாழும் சகல இனங்களும் பாதிக்கப்பட்டனர். சகல இனங்களும் குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் அழிந்தனர். அப்போது இந்தநாட்டில் வாழ்ந்தமக்கள் யாவரும் கேட்டதெல்லாம். பயங்கரவாதத்தை நிறுத்தி இந்தநாட்டில் குண்டுவெடிப்புக்கள் நிறுத்தி யுத்தத்தினை ஒரு முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்றே. கடந்த 30 ஆண்டுகள் ஆட்சி செய்த அரசாங்கங்களிடம் வேண்டினார்கள்.

மீண்டும் ஒரு யுத்தம் இந்தநாட்டில் அவசியமா? இல்லையென்றால் எமக்கு இந்தநாட்டில் தேவைப்படுதெல்லாம் சமதானமாகும். அதன் எதிர்ப்பலனே நாம் இந்தநாட்டில் சிறுகச் சிறுக அனுபவித்து வருகின்றோம். தற்பொழுது இந்தநாட்டில் மீள ஒரு யுத்தத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளும் முயற்சிக்கின்றன.

இதற்குப் புறம்பாக பௌத்த முஸ்லிம் இனங்களுக்கிடையே இனத்துவேசத்தை ஏற்படுத்தி இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தை குழப்புகின்றனர். பௌத்த இயக்கமொன்று முட்டாள்தனமாக அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக பந்தை வீசுகின்றன.; ஹக்கீம் முஸ்லிம் மக்கள் மத்தியில் வீரராக திகழ்ந்து வருகின்றார். அவர் அதிதீவிரபோக்குடைய கருத்துக்களை முஸ்லிம்கள் மத்தியில் பேசுகின்றார்.

அமைச்சர் ஹக்கீம் பௌத்த - முஸ்லிம் இனங்களுக்கிடையே ஜக்கியத்தை சீர்குலைக்கின்ற செயலையே செய்து வருகின்றார். தேர்தல் காலத்தில் மட்டும் அவர் இஸ்லாமிய மதவாதத்தை முஸ்லிம்களுக்டையே பேசி அவரது கட்சிக்கு வாக்கு கேட்கின்றார். முஸ்லிம்கள் ஒருபோதும் இனவாத கட்சிகளுக்கு துணை போகவில்லை. அவர்கள் தேசிய ரீதியிலான கட்சிகளிலேயே அங்கம் வகித்து தமது ஆதரவை தெரிவித்து தமது சேவைகளைப் பெற்றுக் கொண்டுவருகின்றனர்;.

இந்த கிராண்பாஸ் “சமகிபுர” என்ற தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் மூவினங்களையும் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். தமது அருகாமையில் உள்ள உள்ள தொடர் மாடி வீட்டில் தமிழர், சிங்களவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பலர் வாழ்கினறனர். இச் சமூகங்கள் மிகவும் அந்நியோன்னியமாக நல்ல இன்ப - துன்பங்களில் பங்குகொண்டு பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர்.

அதனை அண்மைக்காலமாக இனரீதியிலான கட்சிகள் தேர்தல் காலத்தில் இனவாதத்தை கக்கி அம்மக்களின் இன ஜக்கியத்தை குழப்புகின்றனர். அதில் எமது பௌத்த இயக்கங்களில் சிலவும் செயற்படுகின்றன.

இவர்கள் என்னதான் கூறினாலும், இம்மக்கள் தமது எந்த இனவாதத்திற்கும் துணை போகமாட்டார்கள.; எனஅமைச்சர் விமல் விரவன்ச மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியும் கலந்து கொண்டார்.

(அஸ்ரப் ஏ சமத்)



Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>