![](http://4.bp.blogspot.com/-n4BENd2dy7E/UzEbXJZml5I/AAAAAAAAA8w/Q--Z9w-0fGg/s320/pakisthan.jpg)
அமெரிக்காவின் செயற்பாடுகள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, ஐக்கிய நாடுக்ள மனித உரிமை பேரவைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடர்ந்தும் மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக, மனித உரிமைகள முற்று முழுதாக மீறப்படுவதாக, பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளது. ஏனைய தேசங்களில் பரீட்சார்த்தலுக்காக ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கதென, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கடந்த வாரம், மனித உரிமை மாநாட்டு அமர்வில் ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்ளவில்லையென, சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது எவ்வாறாயிருப்பினும் இப்பிரேரணை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து, இதுவரை எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. அமெரிக்கா ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா கலந்து கொள்ளாமை, பெறுமதிமிக்க வாய்ப்பினை இழந்ததற்கு சமமென, அமெரிக்க சட்டத்தரணியான என்டிரியா ராஸோ தெரிவித்துள்ளார். இருப்பினும், மனித உரிமை மாநாட்டில் நியாயமான, பக்கசார்ப்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென, பாகிஸ்தான் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.