![](http://2.bp.blogspot.com/-VMG0Rop6Ihw/Uqn-805gA_I/AAAAAAAABJI/4hxV60Q4dko/s200/anarkali-f.png)
“சென்ற முறை தனியாளாக நின்றே தேர்தலில் வெற்றி பெற்றேன். எதிர்வரும் தென் மாகாண சபைத் தேர்தலிலும் யார் துணையுமின் தனி ஒரு குதிரை போலும் போட்டியிடுவதே என்னுடைய குறிக்கோளாக இருக்கின்றது.
கலைஞராக நிற்கின்ற கீதா குமாரசிங்க தேர்தலில் போட்டியிட்டாலும் அவரது காரியங்கள் சரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். எனது கடமைகளை நான் நடாத்திச் செல்வேன். கிரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரங்) எனது உற்ற சினேகிதன். கட்சி பேதமின்றி அவருடன் நான் பழகுகின்றேன்.
எதிர்வரும் தேர்தலில் அவர் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சியுடன் இணைந்துகொண்டால் அவருடன் ஒன்றிணைந்து நான் தேர்தல் விடயங்களை முன்னெடுத்துச் செல்வேன்”
எனவும் அனர்கலீ ஆகர்ஷா குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)