![](http://4.bp.blogspot.com/-TQ7B-qwuXPo/U0aRItK7GII/AAAAAAAAXRk/aDriP_RTGRw/s320/udaya-gammanpil.jpg)
தமிழ் பிரிவினைவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும்தண்டனை பரிந்துரை செய்யவென தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிப் பொதுச் செயலாளர், மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தீர்ப்பாயத்தின் மூலம் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அறிஞர்களுக்கு தண்டனை பரிந்துரை செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஆயுத போராட்டத்தின் பின் அதன் அரசியல் பிரிவை தடை செய்யாதிருந்த ஒரே நாடு இலங்கை என அவர் குறிப்பிட்டார். சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் உண்மை கதையை சொல்ல வேண்டியுள்ளதால் தீப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்தார்.