![](http://1.bp.blogspot.com/-2xy9zKaBRg8/U0aS3hdLtgI/AAAAAAAAXRw/RPDdDfiCs8A/s320/Dilaan+perera+(2).jpg)
உடற்பாகங்கள் அகற்றப்படுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.எவ்வாறாயினும், மேற்படி குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி மத்திய கிழக்கு நாடொன்றில் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்ணொருவரின் சலத்தின் உடற்பாகங்கள் சில மாயமாகியிருந்ததாகவும் இது தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்ததா'எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், இயற்கை மரணங்கள் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிடும் பட்சத்தில் அந்நாடுகளில் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு பிரேத பரிசோதனை செய்யும் போது, உடலிலிருந்து அகற்றப்படும் சில பாகங்கள் மீண்டும் பொறுத்தப்படாமல் போவதாலேயே இந்த பிரச்சினை எழுந்துள்ளது'என டிலான் பெரேரா கூறினார்.