மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை பொது மக்கள்பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த முரளிதரனின் பதாதை இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
இப் பதாதையில் சரித்திர நாயகனே, சமாதான கர்த்தாவே, தொடரட்டும் உன் அரசியல் பணி என குறிப்பிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கைலாகு கொடுக்கும் புகைப்படத்தோடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இதில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முகம் உள்ளிட்ட பகுதி இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.