![](http://3.bp.blogspot.com/-Hs9UfBPlNfE/U2D7gWiNQPI/AAAAAAAAXX0/pJlDRI5u7NA/s320/rape.jpg)
குறித்த பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுவரும் 11 வயதுடைய அதேபிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து மாணவிகளே மேற்படி ஆசிரியரினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கடந்த 22 ம் திகதி கைது செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தையடுத்து குறித்த ஆசிரியரை 22ஆம் திகதியில் இருந்து பணித்தடை செய்துள்ளதாகவும் அப்பாடசாலை அதிபரை அக்கரைப்பற்றிலுள்ள பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் செய்யததாகவும் இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற பாடசாலைக்கு தற்காலிக அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் திரு சுகிர்தராஜன் தெரிவித்துள்ளார்