![](http://4.bp.blogspot.com/-d8PW3DHRhV4/U2XhPNUyrJI/AAAAAAAAXaU/x7pULDAeEUU/s320/gobi.jpg)
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த நால்வரில் இருவர் பெண்கள். இருவர் ஆண்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுடன் பேக்கரி உரிமையாளர் எனக் கூறப்படும் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பேக்கரியில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொருவர் விடுதலையாகியுள்ளார்.