Quantcast
Viewing all articles
Browse latest Browse all 7870

பெண்களை மயக்கி நகைகளைக் கொள்ளையிட்ட பஸ் ஆசாமி கைது !!

Image may be NSFW.
Clik here to view.
பெண்களை மயக்கி நகைகளைக் கொள்ளையிட்ட ஜா-எல கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களிடம் இருந்து கொள்ளை யிடப்பட்ட தங்க நகைகள் சந்தேகநபரால் அடகுக் கடையில் வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப் பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 4 லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். பெண்களிடம் நண்பராக பழகி,தூக்க மாத்திரையை குளிப்பானத்தில் கலந்து கொடுத்து தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட பஸ் நடத்துனர் ஒருவர் சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணிடம் அறிமுகத்தை ஏற்படுத்திய நபர் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்பு அப்பெண்ணினால் தயாரிக்கப்பட்ட தேனீரில் தூக்க மாத்திரை கொடுத்து மயக்கம் ஏற்படுத்தி 229,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மார்ச் மாதம் 24ஆம் திகதி சிலாபம் பகுதியில் நண்பரான பெண் ஒருவரை திரையரங்கிற்கு அழைத்துச் சென்று அங்கு குளிர் பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்தி அப்பெண்ணிடமிருந்து 1,91,000 ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டுள்ளார்.

இந்த நகைகளே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது பல கொள்ளைச் சம்பவங்கள் குறித்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் சிலாபம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>