![](http://1.bp.blogspot.com/-TdN1h1POZ8g/U29x6PMOPSI/AAAAAAAAnQA/8mOjAnZqz9w/s320/ilankainet+laut+speaker.jpg)
விடயம் அவ்வாறிருக்க, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் தற்காலிகமாக பிரதேச செயலாளரினால் நியமிக்கப்பட்ட எஸ். ரீ. எம். அன்வர் கிராம நிலதாரி அவர்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கான சுப்றா பரீட்சையில் சித்தியடையாத காரணத்தால் இவருக்கு பதிலாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நியமனம் பெற்று வந்த திருமதி சரோஜா தெய்வநாயகத்திற்கு இடம் கொடுக்காது அடம் பிடிப்பது நாகரீகம் அற்ற செயலாகும். இதற்கு ஆதரவாக பிரதேச செயலாளரும் நிருவாக உத்தியோகத்தரும் செயல்படுகின்றனர். இருவாரமாகியும் இன்னும் இடம் கொடுக்க முடியாமல் தடுமாறும் இவர்களுக்கு உள்நாட்டு அலுவலகள் அமைச்சே பதில் கூறவேண்டும்.
முஸ்லீம் கிராமத்திற்கு முஸ்லீம்களையே போடவேண்டும் என்று அரசியல் வாதிகளை நாடி இனத்துவேசத்தை காரணம் காட்டி தனது தற்காலிக பதவியை நிரந்தரம் ஆக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு திறமைசாலியை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் இவர் இவரது திறமையை சுப்றா பரிட்சையில் காட்டியிருக்கலாம். நிருவாக உத்தியோகத்தருக்குத் தேவை திறமைதான். தவிர்த்து இனத்துவேசம் அல்ல.
ஆலையடிப் பிரதேச செயலகத்தில் முக்கிய இடங்களில் இருப்பவர்கள் முஸ்லீம்கள் (கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், காணி உத்தியோகத்தர்) மற்றும் பலர். இருந்தும் தமிழ் மக்கள் சகோதரத்துவத்துடன் பழகுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அது போல் அக்கரைப்பற்றிலும் பல சகோதர சகோதரிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இனவாதம் பேசும் இவர்களால் அனைவரையும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க முடியுமா? தனது சொந்தத் தேவைக்காக ஊரையே பகைக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே, முதலில் சுயநலத்தை கைவிட்டு பொது நலத்தில் இறங்கவேண்டும். இப்படிப்பட்டவர்களே ஊருக்கும் நாட்டிற்கும் தேவை. எனவே, இதனை கருத்திற் கொண்டு செயற்பட பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எமது கருத்தாகும்.