![]()
செவனகல - அவவேயாகம பகுதியில் நபரொருவரின் கை, கால்களை கட்டி, தாங்கி ஒன்றில் நாகப் பாம்புடன் இட்டுச் சென்ற நபரை பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த நபரை நாகம் தீண்டியதால், அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரது கை, கால்களை அவிழ்த்துவிட்ட சந்தேகநபர் நாகத்தையும் கொலை செய்துள்ளதாக
தெரியவந்துள்ளது. பாம்பு தீண்டிய 45 வயதான நபர் எம்பிலிபிடிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே சந்தேகநபர் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் அந்தப் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.