தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு அழகி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் பகவதி, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தது. இவர் தற்போது இஸ்லாம் மதத்திற்குமாறியுள்ளார். மோனிகா என பெயர் கொண்ட இவர் தற்போது எம்.ஜி.ரஹிமா என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார். பெயரை மாற்றிக் கொண்டது பற்றி இவர் கூறியதாவது:-
நான் இஸ்லாம் மதத்தை 2010ல் இருந்தே பின்பற்றுகிறேன். எனது தந்தை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். என் தாய் இந்து மதத்தை சேர்ந்தவர். நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். நான் மதம் மாறுவதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த என் பெற்றோர்கள் பிறகு சம்மதித்தனர்.
நான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு சிரமமாக இருந்தது. அதனால் பர்தா அணிய ஆரம்பித்தேன். இது எனக்கு சௌகரியமாகவும் சுதந்திரமாகவும் இருந்தது. அதன்பிறகு பர்தா அணிவதால் இஸ்லாம் மதத்தை பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டேன்.
இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் யாருடைய கட்டாயத்திற்காகவும் மாறவில்லை. என்னுடைய முழு சம்மதத்தோடு மாறியுள்ளேன். கைவசம் படங்கள் உள்ளன. அதை முடித்து விட்டு சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். எனது பெயரை எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.