![](http://3.bp.blogspot.com/-hjU9sz0d_L4/U4whUUhk0zI/AAAAAAAAYHg/AUnbDtVwiZ8/s320/arrest.jpg)
இவர் விடுதலை புலிகள் அமைப்பில் இருக்கும் போது வீரமணி என்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனேரி குளத்து மடுவவைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் யானை வழங்கி எனும் வயல் பிரதேசத்தில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் இருப்பதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் இவருக்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தின் மூலம் பகிரங்க பிடியானை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையிலயே நேற்று பிற்பகல் வாழைச்சேனை பொலிஸ் நிலைய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.