சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்ததன் காரணமாக 29 தமிழக மீனவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதற்கு முன்னரும் உத்தரவிட்டிருந்தார். இலங்கை-இந்திய உறவுகளை கட்டியெழுப்புவதே, இதன் நோக்கமாகும்.