வீரகுல பொலிஸில் 6 நாட்கள் சந்தேகநபர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டு, தாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தான் யக்கல பிரதேச பஸ் வண்டி நிறுத்துமிடத்தில் நின்றிருந்தபோது, தேவாலயம் ஒன்று அமைப்பதாகக் குற்றம் சுமத்தி தன்னைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர் என ஹொரம்பாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இந்திக்க சந்தருவன் என்பவர் குறிப்பிடுகிறார்.
மே மாதம் 23 ஆம் திகதி இரவு கைதுசெய்யப்பட்ட தான், 29 ஆம் திகதி அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்வரை அடிக்கடி பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் குறிப்பிடுகின்றார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் குறித்த சந்தேகநபர், ரூபா 30000 தண்டப்பணத்துடனும், ரூபா 2 இலட்சம் வீதம் 6 சரீரப் பிணைகளுடனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
(கேஎப்)