பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய அமைப்புக்களின் மூலம் கட்டவிழ்க்கப்பட்ட இனவாதத் தாக்குதலில் அளுத்கமவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகியுள்ளனர்.
சிறுவர்கள் மற்றும் வயதுவந்தோர் வரை பலரும் இத்தாக்குதலில் காயப்பட்டுள்ளனர். காயப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறுவதற்கு வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கும் கடின நிலை ஏற்பட்டுள்ளது.
பல வீடுகள் தீவைக்கப்பட்டுள்ளது. 500 மேற்பட்ட கலகக்காரர்கள் பள்ளியை முற்றுகையிட வந்தவேளை அளுத்கம தர்காநகர் வாலிபர்கள் அவர்களை அங்கு வரவிடாமல் காத்ததால் அவர்களில் பலரும் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும் அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என அளுத்கமவிலிருந்து இலங்கைநெற் வாசகர் ஒருவர் தெரிவித்தார்.
இன்று களுத்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. காயப்பட்ட மக்கள் தற்போது நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நிலைமையை சீராக்கவதற்கு சில முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு நேற்றைய தினம் அவ்விடத்திற்குச் சென்றபோதும் அவர்களுக்கு அங்கு செல்வதற்கு கலகக்காரர் இடமளிக்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தர்காநகரில் தொடர்ந்தும் பதற்றநிலைமைய இருந்துவருகின்றது.
(கலைமகன் பைரூஸ்)