![](http://1.bp.blogspot.com/-r_u7ySLg0Ww/U5_cMh73T7I/AAAAAAAABmI/5rAdzrFa6iQ/s320/108266-baby-in-shadow1.jpg)
மூன்று வயதான குழந்தை தனது அம்மம்மாவுடன் விகாரைக்கு தானம் கொடுக்க சென்றிருந்த சந்தர்ப்பத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையை பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதை குழந்தையின் அம்மம்மா கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதான பிக்கு எகலியகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்துள்ளார். அவிசாவளை நீதவானின் உத்தரவிற்கு அமைய பாதிக்கப்பட்ட குழந்தை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.