
போட்டியை பார்த்து ரசிக்க வில்லியம்சின் மனைவி கேட், குட்டி இளவரசர் ஜார்ஜுடன் வந்திருந்தனர். அப்போது மைதானத்தில் இறங்கிய ஜார்ஜ், அங்கிருந்த கால்பந்து ஒன்றை வைத்து கொண்டு ஆர்வத்துடன் விளையாட தொடங்கி யுள்ளான். தனக்கு கிடைத்த கால்பந்தை தனது இடது காலால் தட்டி விட்டு மிகுந்த பரவசமடைந்துள்ளான்.
மேலும் அங்கிருந்த போலோ விளையாட்டில் பயன்படுத்தப்படும் போலோ கம்பை கையில் எடுத்த ஜார்ஜ், அதனை பயன்படுத்த தெரியாததால் தன் தாய் கேட்டின் கையை பிடித்து கொண்டான்.இந்த விளையாட்டை கண்டுகளிக்க இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் எடின்பர்க் அரசர் பிலிப்பும் வருகை தந்திருந்தனர்.






