
இவ்வழக்கில் முன்னாள் எம்எல்ஏ மகன் உள்பட மேலும் 2 பேரை பொலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பொன்சிபி அளித்த வாக்குமூலத்தில், தந்தை சங்கரதாஸ் சில ஆண்டுகளுக்குமுன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் தாயார் ஹேமமாலினியுடன் வசித்து வந்தேன். அம்மாவிற்கு தேனி தொகுதி முன்னாள் எம்எல்ஏயின் மகன் ராஜாவுடன் நெருக்கமான பழக்கம் இருந்தது.
இது எனக்கு பிடிக்காததால் அம்மாவுடன் அடிக்கடி தகராறு செய்தேன். இதனால் அவர் என்னை விட்டுவிட்டு சென்னைக்கு சென்றார். நான் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஸ்ரீநகரில் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தேன். அங்கு, அடிக்கடி நண்பர்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்களுடன் வீட்டிலேயே மது அருந்துவோம்.
அவ்வப்போது பெண்களையும் அழைத்து வருவேன். சென்னையில் இருக்கும் தாயார் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் எனது செலவிற்காக . மேலும், பெண்களுடன் நெருங்கி பழகுவதை மிகவும் விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார். இதை யடுத்து, விசாரணை முழுவதையும் பொலிசார் பதிவு செய்து ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும், பொன்சிபிக்கு 19 வயது ஆவதால், திருமணச் சட்டப்படி அவர் மைனர் என்பதால், மேலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப சையது சுலைமான் உசேன் உத்தரவிட்டுள்ளார்.