![]()
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் தற்போது கர்ப்பமடை ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த வில்லியம்ஸ்-கேட் தம்பதியர், ஜார்ஜ் என்ற தங்களது 11 மாத குட்டி இளவரசருடன் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மன்னர் கால விளையாட்டுகளை விளையாடுவதுமே
தன் முழு நேர பொழுது போக்காக கொண்டுள்ள வில்லியம் மனைவி கேட், இரண் டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார் என அமெரிக்காவின், ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கேட் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உடல்நலப் பரிசோதனையில், அவர் கர்ப்பம் தரித்துள்ளதும், இரட்டை பெண் குழந்தைகளை அவர் கருவில் சுமப்பதும் உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கேட்டிற்கு பெண் குழந்தைகள் என்றால் மிகவும் இஷ்டம் என்றும் இரட்டை பெண் குழந்தைகளை பெறவுள்ள அவர், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.