![](http://4.bp.blogspot.com/-GGUFWwFpaMQ/U8U7iUXFVRI/AAAAAAAAYto/qLObodLQQ5U/s320/body+found.jpg)
நானு ஓயாசமர் செட் தோட்டத்தைச் சேர்ந்தகிருஸ்ண குமார் (வயது 46) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் கடந்த 10 ம் திகதிமுதல் காணாமல் போனதாக நானு ஓயாபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 15.07.2014 அன்று காலை கொத்மலை ஓயா கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிசஸாரும் நானு ஓயா பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)