![]()
சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை சிறுமியின் தந்தை கொலை செய்துள்ளார். அரணாயக்க, வில்பல பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நான்கு வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை துஸ்பிரயோகத் துக்கு உட்படுத்திய 57 வயதான
நபர் சிறுமியின் தந்தையின் தாக்குதலின்போது உயிரிழந்துள்ளார். கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அரணாயக்க பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.