![](http://4.bp.blogspot.com/-c8OrUb8Biio/U8f54tq8c5I/AAAAAAAAYw0/eFAdPVJnsUQ/s320/syed+salahudin.jpg)
பாகிஸ்தானில் செயற்பட்டவரும் தீவிரவாத அமைப்புக ளானஹர்கத்-உல்-அன்சார், ஹிஸ்ப்-உல்-முஜாகிதீன், ஜாமியத்-உல்-முஜாகிதீன், அல்-ஜிகாத், அல்-பர்க், அல்-பதர் மற்றும் தெரிக்-உல்-முஜாகிதீன் ஆகிய 7 தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இயங்கி வருகிறது. அதன் தலைவராக சையத் சலாஹூதீன் செயல்பட்டு வருகிறான்
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சையத் சலாஹூதீன், இந்திய அரசுக்கு எதிரான விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டும். ஒடுக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளித்தால் அதை நாங்கள் வரவேற்போம். காஷ்மீரில் இந்தி ராணுவம் பயங்கரவாத ஆட்சி நடத்துகிறது. இதனால் மக்கள் கொல்லப்படுகின்றனர் என தெரிவித்துள்ளான்
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக போர் புரிந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுப்போம்''என கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.